இதோ சீக்கிரம்; வருவேன் என்றவர்

 

இதோ சீக்கிரம்; வருவேன் என்றவர்

அதி சீக்கிரம் வருவாரே

சபையோரே நீங்க ஆயத்தமா?

ஆண்டவரை சந்திக்கவே  ஆயத்தமா-நம்

 

உலகில் நடப்பவைகள் அனைத்துமே

நம் ஆண்டவரின் வருகையை  முன் கூறுது

காலங்களை நிதானித்துக் கொள் (2)

ஆண்டவரை சந்திக்கவே  ஆயத்தப்படு - உன்                 - இதோ

 

நோவாவின் காலம் இக்காலமல்லோ

உணர்வில்லா நாட்கள்  இந்நாட்களல்லோ

அறிந்து கொள் தேவ எச்சரிப்பை (2)

பேழைக்குள் நுழைந்து  நீ ஆயத்தப்படு  - இதோ

 

நிர்விசாரமும் ஆகார திரட்சியும்

சோதோமின் அழிவுக்கு  காரணமல்லோ

ஒழித்திடு வீண் பெருமைகளை (2)

தாழ்மையோடு வருகைக்கு நீ ஆயத்தப்படு  - இதோ

 

நினையாத நாழிகையில் வருவேன் என்றவர்

நினைத்திராத வேளையிலே வந்திடுவாரே

விழித்திரு ஜெபத்திலே தரித்திரு (2)

இயேசுவுக்கு முன்நிற்க நீ ஆயத்தப்படு   - இதோ